ஸகலத் தொடர்நிலைப் பாட்டையும் (USB) நெருப்புக்கம்பியும் (Firewire)

கணினித் தொழிலில் புதிது புதிதாக சொற்கள் தோன்றுகின்றன. புதிதாக நெறிகளும் வளர்கின்றன. கணினி வரலாற்றில் பரிணமித்து வரும் பகுதிதான் தொடர்நிலைத் துறை (Serial Port). முதலில் வந்த கணினிகளில் RS-232 என்ற தொடர்நிலைத் துறை மட்டும் தான் இருந்தது. பிறகு PS/2 என்ற நெறி உருவாகியது. இவ்விரு துறைகளும் மந்தமான தரவு பரிமாற்றுத்திறன் கொண்டிருந்தன. 1.5Mbps (நொடிக்கு 1.5 மெகாபிட்) வேகத்தில் எலி (mouse) அல்லது கோளச்சுட்டி (trackball) உபயோகங்களில் மட்டுமே இது சாத்தியமாக இருந்தது. இரண்டு நெறிமுறைகள் - சகல தொடர்நிலைப் பாட்டை (USB) மற்றும் நெருப்புக்கம்பி (Firewire) உருவாக்கபட்டன. இவ்விரு நெறிமுறைகளுக்கிடையே ஒற்றுமைகள் உண்டு. USB மற்றும் நெருப்புக்கம்பியின் இணைப்பிகள் பார்ப்பதற்கு ஒன்றுபோல இருந்தாலும், நிஜத்தில் ஏற்பற்றது(incompatible) ஆகும்.

Firewire ஆப்பிள் நிருமத்தால் 1980களில் படைக்கப்பட்டது. இது நிலைவட்டுகளிடமிருந்து (hard disk) தரவுப்பரிமாற்றம் மேற்கொள்வதற்காக ஆரம்பத்தில் உபயோகிக்கபட்டது. பிறகு புறக்கருவிகளுக்கு (peripherals) நீட்டிக்கப்பட்டது. இதன் வெற்றியைக் கண்ட ஆப்பீள் நிறுமம் இந்த நெறிமுறையை IEEE அமைப்பு மூலம் டிஸம்பர் 1995யில் தரப்படுத்தியது. ஆனால் Firewireயின் தரமாக்கத்திற்கு முன்பே ஸோனி நிறுமம் மூலம் நிகழ்பதிவி கருவி (camcorder) தொழிலகத்தில் கடைப்பிடித்து சந்தையில் வெளிவந்தது. ஸோனி நிறுமம் நெறுப்புக்கம்பிக்கு I.Link என்ற பெயரிட்டு அதன் நிகழ்பதிவிகளைச் சந்தையிட்டது. Firewireயின் செயல்முறைப்படுத்தல்களில் வேறுபாடுகள் உண்டு. Firewire இன்று ஸோனி மற்றும் ஆப்பிள் கணினிகளில் ப்ரபலமாக காணப்படுகிறது. இது தவிர நிகழ்பதிவிகள், புற நிலைவட்டுகள் (external hard drives), ஒளிவட்டு இயக்கிகள், வருடிகள் (scanners), இணைய படக்கருவிகள் (webcams) போன்ற சாதங்களில் பயன்படுகிறது. Firewireயின் தரவுபரிமாற்றம் தொடக்கத்திலேயே 400Mbps வரை ஆதரித்தது.

ஸகல தொடர்நிலை பாட்டை பல நிறுமங்கள்- காம்ப்பேக், இலக்கக் கருவி (Digital Equipment), மைக்ரொஸாஃப்ட், ஆகியவற்றின் கூட்டுழைப்பால் கருத்தமையப்பட்டு 1998இல் தரமாக்கப்பட்டது. மைக்ரொஸாஃப்ட் நிறுமம் விண்டோஸ் 98 இயங்குதளத்தோடு USBவிற்கான இயக்க மென்பொருள்களை (driver) விடுவித்தது. USB1.1 12Mbps மற்றும் 400Mbps வேகங்களில் தரவுகளை பரிமாற்றும். USB2.0 நெறிமுறை 2002இல் தான் வெளியிடப்பட்டது. USB2.0 வெளியீட்டில் தரவு பரிமாற்றம் 480Mbps வரை நீட்டிக்கப்பட்டது.

Firewire என்பது ஒரு சம உரிமை பாட்டை முறைமை (peer-to-peer bus system). Firewire சாதனங்கள் அனைத்தும் முழு செயல்கூற்றுக்கள் (functionalities)- ஆண்டான் (master) மற்றும் அடிமை (slave) ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும். ஆகையால் Firewire சாதனங்கள் USB சாதனங்களைவிட விலை அதிகமானவை. இக்கட்டமைப்பின் பலன் என்னவென்றால் ஒரு கணினி போன்ற விருந்தோம்பி சாதனம் (host device) ஒரு Firewire அமைப்பில் தேவையில்லை. உதாரணத்திற்கு - ஒரு நிகழ்பதிவி ஒரு இலக்க ஒளித்தோற்ற வட்டு படிப்பியிடம் (DVD player) கணினியின்றி நேரடியாக தொடர்புகொள்ள முடியும்.

USB என்பது ஒரு விருந்தோம்பிசார் முறைமை (host-based system). ஒரு USB அமைப்பில் ஒரு கணினி விருந்தோம்பி சாதனமாக தேவைப்படுகிறது. இவ்விருந்தோம்பிக்கு இணைந்திருக்கும் அனைத்துச் சாதனங்களும் அடிமைகளாக திகழ்கின்றன. கணினி/விருந்தோம்பி தவிற்று USB பொருள்களின் தருக்கங்களில் அடிமை செயல்கூறு மற்றும்தான் அடங்கியுள்ளன. ஆகையால் USB சாதனங்கள் Firewire சாதனங்களைவிட மலிவு விலைகளில் கிடைக்கின்றன.

ஒரு USB அமைப்பில் மூன்று வகையான சாதங்கள் இணைக்கப்படலாம். முதலாவது விருந்தோம்பி (host). இப்விருந்தோம்பி தான் USB முறைமைக்கு கட்டுப்படுத்தி. ஒரு USB அமைப்பை படத்தில் காணலாம்.

USB சாதனங்களில் குறைதிறன் மற்றும் அதிதிறன் சாதனங்கள் என வகைக்கப்படுகின்றன. இந்த வகைபாடு உபயோகமாகும் மின்னோட்டத்திற்குக் தகுந்ததாகும். குறைதிறன் சாதனங்கள் 100mAக்குக் குறைவான மின்னோட்டத்தில் இயங்குகின்றன. அதிதிறன சாதனங்கள் 100mAயிலிருந்து 500mA வரை இயங்குகின்றன. ஒரு பாட்டைதிறன் குவியம் (bus powered hub) குறைதிறன் சாதனங்களுக்கு மட்டும் மின்திறனை வினியோகப்படுத்தும். ஒரு பாட்டை திறன் குவியத்தில் மொத்த மின்னோட்ட உபயோகம் 500mAக்குள் இருத்தல் வேண்டும். பாட்டை திறன் குவியம் ஒரு அதிதிறன் சாதனம் ஆகும். ஆகையால் இது மேற்புறம் விருந்தோம்பி அல்லது சுயதிறன் குவியத்திற்கு இணைக்கப்படுகிறது. ஒரு சாதனம் 500mAத்திற்கு மேல் தேவைப்பட்டால் அது சுயதிறனாக இருக்கவேண்டும். ஒரு சுயதிறன் குவியம் பாட்டை திறன் குவியத்துடன் இணைக்கப்படலாம். ஒரு பாட்டை திறன் குவியம் இன்னொரு பாட்டை திறன் குவியத்துடன் அல்லது நான்குக்கு மேற்பட்ட கீழ்ப்புற சாதனங்களுடன் இணைக்கப்படக்கூடாது.

USB தரவு பரிமாற்றங்கள் நான்கு வகையானவை: குறுக்கீடு (interrupt), கட்டுப்பாடு (control), மொத்தம் (bulk) மற்றும் நேரமொன்றியம் (isochronous).

USB இயக்கமென்பொருள் சாதனங்களின் இருப்பு மற்றும் இணைதல், பரித்தல் நிகழ்வுகளை உணர்கிறது. விண்டோஸ் 98, NT5.0, XP ஆகிய இயங்குதளங்கள் இந்த USB இயக்கமென்பொருளுடன் வினியோகிக்கப்படுகிறது. இந்த மென்பொருள் செருகு இயக்க நெறிமுறையை (plug & play) கடைப்பிடிக்கிறது.

USB என்படு "பேசப்பட்டால் பேசு" நெறிமுறையாகும். புறக்கருவிகள் விருந்தோம்பியுடன் தன்னிச்சையாக தொடர்புகொள்ள முடியாது; விரும்புதோம்பி இத்தொடர்பைத் தயவிட்டால் மட்டும் தான் இவர்கள் தொடர்புகொள்ளும். ஒரு Firewire கணு தன்னிச்சையாக எந்நேரமும் மற்றக் கணுவுடன் தொடர்புகொள்ளலாம்.

USB 5V மின்வழங்கலில் இயங்குகிறது. Firewire 30V வரை வழங்கக்கூடியது.

அம்சம் Firewire USB
  1.1 2.1 400 800
தரவுப் பரிமாற்ற வீதம் 12 Mbps 480 Mbps 400 Mbps 800 Mbps
சாதனங்களின் எண்ணிக்கை 127 127 63 63
செருகியக்கம் ஆம் ஆம் ஆம் ஆம்
வென்செருகல் ஆம் ஆம் ஆம் ஆம்
பாட்டைத்திறன் ஆம் ஆம் ஆம் ஆம்
பாட்டை முடிப்பின் தேவை இல்லை இல்லை இல்லை இல்லை
பாட்டை வகை தொடர்நிலை தொடர்நிலை தொடர்நிலை தொடர்நிலை
கம்பிவட வகை முறுக்கிரட்டை (4 மின்கம்பிகள், 2 திறன், 1 முறுக்கிரட்டைத் தொகுப்பு) முறுக்கிரட்டை (4 மின்கம்பிகள், 2 திறன், 1 முறுக்கிரட்டைத் தொகுப்பு) முறுக்கிரட்டை (6 மின்கம்பிகள், 2 திறன், 2 முறுக்கிரட்டைத் தொகுப்புகள்) முறுக்கிரட்டை (8 மின்கம்பிகள், 2 திறன், 2 முறுக்கிரட்டைத் தொகுப்புகள், 2 நிலம்)
பிணையத்தகுமை விருந்தோம்பி சார்ந்த விருந்தோம்பி சார்ந்த ஒப்பி-ஒப்பி பரிமாற்றம் ஒப்பி-ஒப்பி பரிமாற்றம்
பிணைய இடவியல் குவிப்பு குவிப்பு தொடர்ச்சங்கிலி தொடர்ச்சங்கிலி

மூலங்கள்:

  • http://support.packardbell-europe.com
  • Charge your Battery by using a USB Port-Len Sherman; Power Electronics, Jan 2004
  • Firewire vs USB2.0-Cade Metz; PC Magazine, Feb 2003

    (c) பதிப்புரிமை தொழில்நுட்பம் இணைய தகவல்தளம்/COPYRIGHT THOZHILNUTPAM.COM