குறுக்குப்புல மிகைப்பி - Cross-field Amplifiers (CFAs)

குறுக்குப்புல மிகைப்பி என்பது ஒரு வகையான அகலப்பட்டை மிகைப்பி ஆகும். இதனை ஒரு அலைப்பி (oscillator) ஆகாவும் பயனிபடுத்தலாம். இதன செயலியக்கம் காந்த அலைப்பி (magnetron) போன்றது. இது அதிக செயற்திறனுடன் அதிக மின்திறன் அளிக்கும். ஒரு குறுக்குப்புல மிகைப்பியின் பட்டையகலம் மைய அலைவெண்ணிலிருந்து (center frequency) மேலும் கீழும் 5 சதவிகிதம் வரை அடங்கும். மெகவாட் கணக்கில் உச்ச மின்திறனும் (peak-power) பத்துகள் கிலோவாட் கணக்கில் சராசரி மின்திறனும் (average power) 70 சதவிகிதம் மேலான செயற்திறனும் இதனுடன் சாத்தியமாகும். இந்த சிறப்பம்சங்கள் காரணத்தால் நுண்ணலை முறைமகளில் (microwave systems), குறுக்குப்புல மிகைப்பிகள் இடையக அல்லது இறுதிக் கூற்றுகளாக பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு நுண்ணலைச் செலுத்தியில் முதல் ஒன்று அல்லது இரண்டு கூற்றுகள் இயங்கலைக்குழல்களாக (travelling wave tubes) அமைகின்றன. இறுதிக் கூற்று குறுக்குப்புல மிகைப்பியாக அமைகிறது. சில அமைப்புகளில் ஒன்றுக்கு மேலான குறுக்குப்புல மிகைப்பி கூற்றுகள் பயனாகின்றன. இயங்கலைக்குழல்கள் மற்றும் குறுக்குப்புல மிகைப்பிகள் இரண்டிலும் அகல அலைவெண் நெடுக்கத்தில் (frequency range) மிகைப்பு மறுமொழிப்பண்பு (amplification response) கிடைவளையாக (flat) திகழ்கிறது.

குறுக்குப்புல மிகைப்பியின் சிறப்பம்சம் என்னவென்றால், இதன் குழல் துடிப்பூட்டப்படாத நிலையில் (unpulsed state) (அதாவது அணைக்கப்படும்போது), வானலை ஆற்றல் குழல் வழியாக மாற்றமின்றி கடக்கிறது. குழல் துடிப்பூட்டப்படும்போது, அது ஒரு அலையடையின் பகுதியாக செயல்படுகிறது. இந்த அம்சம் மூலம், இறுதி அல்லது முந்தையக் கூற்று குறுக்குப்புல மிகைப்புகளை செயலிழக்கச் செய்து வெளியீடு வானலை மின்திறனை (output RF power) தேவைக்கேற்பக் குறைக்கலாம். இந்த அம்சத்தால், குறுக்குப்புல மிகைப்பியில் கோளாறு ஏற்பட்டாலும், செலுத்தி ஒட்டுமொத்தமாக செயலிழப்பதில்லை.

குறுக்குப்புல மிகைப்புகளின் பட்டையகலம் மற்றும் மிகைப்பு கற்றையலைப்பிகள் (klystrons) மற்றும் இயங்கலைக்குழல்களைவிட குறைவாக இருந்தாலும் இதன் செயற்திறன் இவைகளை ஒப்பிடுகையில் உயர்வானது.

ஒரு காந்தலைப்பியில் பல்வேறு அலைவெண் பாங்குகள் (frequency modes) இடம்பெறலாம். ஒரு குறுக்குப்புல மிகைப்பியில் அடுத்துள்ளப் புழைகள் வலுக்கட்டாயமாக 180 பாகை கட்ட வேறுபாட்டில் அமைக்கப்படுகிற்ன. இதன் பொருட்டு இரு வாரிடு வளையங்கள் ஒன்றுவிட்டப் புழைகளை இணைக்கின்றன. இவ்விரண்டு

 

புதுப்பிப்பு காரிக்கிழமை, மடங்கல்-கன்னி 11; 2008

(c) பதிப்புரிமை தொழில்நுட்பம் இணைய தகவல்தளம்/COPYRIGHT THOZHILNUTPAM.COM