திறன் காரணி திருத்தம்
மின்சாரத்தில் இயங்கும் சாதனங்களில் முதல் கூற்றாக அமைவது ஒரு மின் வழங்கு கூறு (power supply stage). மின் வழங்கிகளில் 4-இருமுனைய திருத்தி ப்ரபலமாக காணப்படுகிறது. இந்த திருத்தியில் முக்கியமான உறுப்பு மின்மாற்றி (transformer). இதுபோன்ற திருத்திகளில் வாடிக்கையாளரின் சுமை மின் தூண்டு பண்புகளை ப்ரதிபலிக்கிறது. இது காரணத்தால் மின்னோட்டம் மின்னழுத்தை முன்செல்லுகிறது. இந்த முந்தல் காரணத்தால் மிந்திறன் அனைத்தும் வாடிக்கையாளரின் சுமை செயல் கூற்றிற்க்கு உபயோகிக்கப்படாமல் மின் தூண்டிகளில் தேங்குகிறது. சுமை செயல்கூற்றிற்க்குச் செல்லும் மின் திறன் உபயோகமானது ஆனால் மின் தூண்டிகள் அல்லது மின் தேக்கிகளில் தேங்கும் மின் திறன் ப்ரயோஜனமற்றது. பொதுநுகர்வோர் வளாகத்தில் இந்த மின் திறன் வீண் குறிப்பிடத்தக்கதல்ல. ஆனால் தொழிலக வளாகங்களில் இம்மின்னோட்ட முந்தலால் மின்வழங்கு இலாக்கா அல்லது நிறுமத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது. ப்ரபலமான சுமைகளில் மின்னோடிகள், மின்மாற்றிகள் மற்றும் குழல்விளக்குகளில் இந்த திறன் காரணி கோணம் அதிகமாது. இந்த மின் தூண்டுத் தன்மை ஒரு காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது. இக்காந்தப் புலம் தொழிலகச் சாதனங்களில் தேவைப்படுகிறது. ஆனால் இக்காந்தமே ஒரு அளர்ந்த பணியில் ஈடுபடுவதில்லை.
திறன் முக்கோணம்
மிந்திறன் ஒரு முக்கோணமாக குறியிடலாம். இந்தக் கருத்தை ஸகஜ அனுபவத்தில் விமானப் பயணத்திற்கு ஒப்பிடலாம். ஒரு வானவூர்தியின் பறப்பை இரு உறுப்புக்களாக பிரிக்கலாம் - தூக்கு மற்றும் இழுப்பு. இரு உறுப்புக்களும் பயத்தில் தேவைப்படுகிறது. ஆனால் தூக்கு அளக்கப்படும் பணியில் காண்பதில்லை. இந்த இழுப்பை செயல்படு திறன் என அழைக்கலாம். தூக்கை செயல்படா திறன் எனலாம். உங்களுக்கு செலவாகும் எரிபொருள் இரு உறுப்புக்களுக்கு உபயோகிக்கப்படுகிறது.
இதே போன்று மின்னோடிகளுக்கு செலவாகு மின் திறனை இரண்டு உறுப்புக்களாக பிரிக்கலாம். எதிர்வினைத் திறன் எனப்படுவது ஒரு காந்தப்புலத்தை ஏற்படுத்துவதற்கு செலவாகும் மின் திறன். செயல்படு திறன் தான் உபயோகமான பணியில் ஈடுபடுகிறது. மொத்தத் திறன் இவ்விரண்டு உறுப்புக்களைக் கொண்டது. இவைகளை ஒரு முக்கோணமாக குறியிடலாம்.
திறன் காரணி எனபடுவது மொத்தத் திறத்திற்கு செயல்படு திறன் வீதம் ஆகும்
திறன் காரணி = செயல்படு திறன் (KVA)/மொத்தத் திறன்(KW) = cos(#)
திறன் காரணி திருத்தம்
மேற்படி நாம் அறிவது என்ன என்றால் மின்னோட்டம் மின்னழுத்தை ஒத்திசையாக அமைய எய்தால் மின் திறனின் வீண் குறையும். இதை அடைய ஒரு வழி மின் தேக்கிகளின் உபயோகம் மூலம். மின் தேக்கி ஒரு இயந்திர அமைப்பில் பொறுத்தப்படும்போது ஒரு மின் தூண்டு சுமைக்கு தேவையான எதிர் வினை திறன் மின் தேக்கியிலிருந்து பெறப்படுகிறது. இம்மின் தேக்கி பொறுத்தப்படாவிட்டால் இந்த எதிர்வினைத் திறன் மின் நிறுவன வழங்குவிலிருந்து பெறப்படுகிறது. இத்திறன் வீண்செலவுக்கு நேரிடும்.
(c) பதிப்புரிமை தொழில்நுட்பம் இணைய தகவல்தளம்/COPYRIGHT THOZHILNUTPAM.COM