மீளமைவு பரப்பு மரம்

ஒரு மீளமைவு பரப்பு மரம்  (reset distrubution tree) கடிகை பரப்பு மரம்  (clock distribution tree) போல் கவனத்துடன் அமைக்கப்பட வேண்டும்.  பொதுவாக எந்த இலக்கவியல் வடிவமைப்பிலும் மீளமைவு உள்ளீடுகளின் எண்ணிக்கை கடிகை உள்ளீடுகளின் எண்ணிக்கை சமமாக இருக்கும்.  மீளைவு பரப்பு மரத்தில் காலவிவர தேவைப்பாடு (timing requirement) கடிகை பரப்பு மரத்தில் உள்ளது போல் கண்டிப்பு தேவையில்லை.

மீளமைவு குறிகை ஒரு கடிகை சுழற்சியில் அனைத்து மீளமைவு சுமைகளை எட்டுவதுடன் மீளமைவு மீட்பு நேரத்தையும் (reset recovery time) இணங்க வேண்டும். clk-q-மீளமைவு. மீளமைவு முதன்மை இழுவிழுவியில் கிளை கடிகையை செலுத்தினால், மீளமைவு மீட்பு நேரத்தை ஒரு வேளை இணங்கும்.

பெரும்பாலுமாக பரப்பு மரத்தை கடந்து மீளமை ஒத்தியங்கு இழுவிழுவியையும் கடக்க ஒரு கடிகை சுழற்சிக்குள் இயலாது. மீளமை குறிகையை மேலும் துரிதப்படுத்துவதற்கு கீழுள்ளது போல் பரப்பு மரம் மாற்றியமைக்கப்படுகிறது.

மேல் கூறப்பட்ட மீளமைவு அமைப்புகளில் மனையமைவு பின்பு காலவிவர பாவனை (post layout simulation)  நடத்தப்பட்டு மீளமைவு கடிகையை முந்தவில்லை என உறுதிசெய்ய வேண்டும். கடிகையை முந்தினால் பிடிப்பு நேரத்தின்  மீறல் (hold time violation) நிகழும்; மிகையாக கடிகையை பின் தங்கினாலும் மீளமைவு மீட்பு நேர மீறல் (reset recovery time violation). இவ்விரண்டு அமைப்புகளிலும் காலவிவரங்களை தேவைப்பாடுகளை இணங்க சரிக்கட்டல் தேவைப்படும். மனையமைவுக்கு பிறகு சரிக்கட்டுதல் பெரும்பாலுமாக சாத்தியமாகாது.

ஒத்துயங்கு மீளமைவு பரப்பல்

ஒத்தியங்கு மீளமைவை பரப்புவதற்கு பரப்பு மரம் முழுவதும் இழுவிழுகள் அமைக்கப்படுகின்றன. இந்த முறையின் சிறப்பு என்னவென்றால், மீளமைவின் சுணக்கங்கள் அடுத்தடுத்து இழுவிழுவிகளை எட்டுமா என்கிற கவலையே இல்லை.

 ஒவ்வொரு கூற்றின் குறியீடு வருமாறு:

இந்த முறைமையில் மீளமை சமிக்ஞை மற்ற தரவு சமிக்ஞைகள் போல் நடத்தப்படுகிறது, ஒவ்வொரு கூற்றிலும் சமமாக வீச்சுவிரிவுடன் பரப்பப்படுகிறது.

ஒத்துயங்கா மீளமைவு பரப்பல்

ஒத்தியங்கா மீளமை சமிக்ஞைகளை பரப்ப மேலுள்ளது போல் ஒவ்வொரு படியமைப்பிலும் மீளமை ஒத்தியங்காக்கி கூற்றுக்கள் அமைக்கப்படுகின்றன.

இதன் அமைப்பில் ஒத்தியங்கு முறையில் உள்ள ஒவ்வொரு இழுவிழுவிகளுக்கு பதிலாக இரண்டு ஒத்தியங்காக்கு இழுவிழுவிகள் அமைக்கப்படுகின்றன.

மேற்படி ஒத்தியங்கு மற்றும் ஒத்தியங்கா பரப்பு மரங்களிருந்தி வெளிவரும் மீளமை இடமமைவு-திசைவுக்கு (place and route) பிறகு ஒரே கடிகை சுழற்சியில் எல்லா வடிவமைப்பு கூற்றுகளுக்கு வந்தடைய வேண்டும். இதற்கு பரப்பு மரத்தின் கிளைகளின் நீளங்கள் கையியங்காக (manual) சமமாக்கப்படுகின்றன.

<<<முந்தியப் பக்கம்