செயற்கைக்கோள் கீழ்தொடுப்பிற்கு (downlink) உபயோகிக்கப்படும் Ku-செயற்கைக்கோள் பட்டையின் வரம்பு சற்று அதிகமானது, குறிப்பாக 10.7 இலிந்து 12.75 GHz. இந்த அகலப் பட்டைய ஒரே உள்ளிட அலைவி அலைவெண்ணால் கலக்கிப்பிரிப்பதற்கு கடினமானது. Ku-பட்டை உள்ளிட அலைவிகள் இரண்டு உள்ளிட அலைவிகள்- ஏதேனும் அல்லது இரண்டும் பயன்படுத்துகின்றன. 10.7 - 11.8 GHz மற்றும் 11.8 - 12.75 GHz Ku-பட்டைகள் முறையே 9.75 GHz மற்றும் 10.7 அல்ல்து 10.75 GHz உள்ளிட அலைவிகளை பயன்படுத்துகின்றன.

செயற்கைக்கோள் குறிகைகள் முனைவாக்கத்துடன் (polarization) செலுத்தப்படுகின்றன. முனைவாக்கத்தினால் இருமடங்கு தகவலை ஒரே அலைவெண்ணில் அனுப்பலாம். தளம் மற்றும் சுழல் முனைவாக்கங்கள் இரண்டும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கிண்ண அலைக்கம்பத்தின் வெளியீட்டில் பல (குறிப்பாக 4 வரை) வடங்கள் அமைந்துள்ளன.

ஒரே செயற்கைக்கோளிற்கு கிண்ணத்திற்கு பல (அதாவது ஒன்றிற்கு மேல்) மேலமர்வுப் பெட்டிகளை இணைக்கவேண்டுமெனில், கிண்ணத்துட ஒரு செயற்கைக்கோள் விநியோக அமைப்பு (satellite distribution system) இணைக்கப்பட வேண்டும்.

கலரீடு மற்றும் நிபந்தனை அணுகல் - (Scrambling and Conditional Access)

ஒரு செயற்கோள் ஒளிபரப்பு அமைப்பின் இன்றியமையாத பகுதி என்னவென்றால் சந்தாதாரரற்றவர்கள் நிகழ்ச்சிகளை பெற இயலாமப்படுத்தல். இதன் பொருட்டு பயன்படுத்தப்படும் அமைப்புதான் நிபந்தனை அணுகல் அமைப்பு (Conditional Access System-CAS). ஒரு CAS அமைப்பை இரண்டு பாகங்களாக பிரிக்கலாம்.

  • கலரீட்டல் துணையமைப்பு (scrambling subsystem)
    இது ஒளிபரப்படும் தாரையை (stream) கலரிடும். கலரீட்டலின் தேவை இரண்டாகும்: இவைகளில் முதலில் வாடிக்கையாளர் பெறுவியில் வரும் தாரையை ஒத்தியக்கச் (synchronize) செய்தல்; இரண்டாவது, அனுமதியற்றவர்கள் நிகழ்ச்சிகளை சரியாக பெறமுடியாமல் செய்தல்.
  • அணுகல் கட்டுப்பாட்டமைப்பு (access control system)
    இந்த துணையமைப்பு செயற்கோள் ஒளிபரப்பகத்திலிருந்த பெறப்படும் சில சிறப்பு செய்திகளை புரிந்து கலர்விலக்கம் (descrambling) தேவையுள்ளதா, தேவையிருப்பின் கலர்விலக்க முறையை உறுதிபடுத்தும்.

    பெறுவி மறைவிலக்கத்தில் (receiver decoding) கலர்விலக்கம் பற்றி தகவல் தெரிவிக்கும் இச்சிறப்பு செய்திகளுக்கு மறையீடு கட்டுப்பாடுச் செய்திகள், அதாவது Encryption Control Messages (ECM) எனப்படும். மறையீடு தொழில்நுட்பத்தை பொதுவாக இருண்டாக வகைப்படுத்தலாம்:

  • தாரை மறையீடு (stream cipher)
    ஒரு போலி-சமவாய்ப்பு வரிசை (Pseudo-Random Sequence) உள்வரும் தாரையின் ஒவ்வொரு துகளுடன் (bit) 'ஒன்றா-அல்லது' செய்யப்படுகிறது (XORed)
  • தொகுதி மறையீடு (block cypher)
    உள்வரும் தரவுத் தாரை தொகுதிகளாக (blocks) பிரிக்கப்பட்டு ஒரு தொகுதியும் மறையிடப்படுகிறது.

    இலக்க ஒளிபரப்பில் மூன்று விதமான தாரைகள் உள்ளன. இவை கேட்பொலித் தாரை (audio stream), ஒளிதோற்றத் தாரை (video stream) மற்றும் பயனர் தரவுத் தாரை (user data). ஒவை முன்றும் ஒளிபரப்பில் ஒரே தாரையாக ஒன்றுசேர்க்கப்படுகின்றன (multiplexed). ஒன்றுசேர்க்கப்பட்ட முன்னர் உள்ள மூன்று தாரை பொட்டலமிட்ட அடிப்படைத் தாரை (packetized elementary stream-PES) எனவும் ஒன்றுசேர்ந்த தாரையை போக்குவரத்து தாரை (transport stream-TS) எனவும் அழைக்கப்படுகின்றன. PES தாரைக்கு 'தாரை மறையீடு' மற்றும் TS தாரைக்கு 'தொகுதி மறையீடு' செய்யப்படுகின்றன.

    <<<முந்தியப் பக்கம்

    (c) பதிப்புரிமை தொழில்நுட்பம் இணைய தகவல்தளம்/COPYRIGHT THOZHILNUTPAM.COM

    புதுப்பிப்பு ஞாயிறு நவம்பர் 22, 2005