கம்பியில்லா தொலைதொடர்பு முறைகள்

கைமாற்றம் (Handoff, Handover) என்பது ஒரு நிகழும் அழைப்பை ஒரு கலத்திலிருந்து இன்னொன்றுக்கு நிலைமாற்றுவது. ஒரு கம்பியில்லா பிணையத்தில் நான்கு விதமான கைமாற்றங்கள் உண்டு. தடம் கைமாற்றம் (Channel Handover) மற்றும் கலம் கைமாற்றம் (Cell Handover) -இவைகள் ஒரு BSCஇயிலுள்ளே, இரு BSCகளுக்கிடையே ஆனால் ஒரே MSCக்குள்ளே அல்லது இரு MSCகளுக்கிடையே. முதல் இரு கைமாற்றங்களுக்கு அக கைமாற்றம் (Internal Handover) எனறழைக்கப்படுகின்றன. இறுதி இரண்டிற்கு புற கைமாற்றம் (External Handover) என்றழைக்கப்படுகின்றன. கைமாற்றங்கள் நகர்கருவிமூலம் துவக்கப்படுகின்றன அல்லது பிணையத்தின் உபயோகச் சுமையை சீர்ப்படுத்த MSC மூலமும் துவக்கப்படுகின்றன. GSMஇல் பயனில் காலகட்டங்கள் (idle time slots) மற்றும் CDMAயில் குறிப்பிட்ட அலைவெண்களில் நகர்கருவி ஒலிபரப்பு கட்டுப்பாடுத் தடத்தை (Broadcast Control Channel) வருடி அருகாமையிலுள்ள கலங்களில் 6 உன்னத கலங்களை அவைகளிருந்து பெறும் வானலை திறத்தின்படி (Received Radio Signal Strength) சேகரிக்கும். இத்தகவலை BSCக்கும் MSCக்கும் தெரிவிக்கும். கைமாற்றத்தின் செயல்படுத்தம் கம்பியில்லா பிணையத்தை பொறுத்தவரை உள்ளது. குறைவான ஏற்பு படிமுறைப்படி (Minimum Acceptance Algorithm) ஒரு நகர்கருவியின் பெறும் குறிகைத்திறன் (Received Signal Power) ஒரு அளவிற்க்கு மீது குறைந்தால் அதன் இயங்கும் திறன் (Operating Power) அதிகரிக்கப்படுகிறது. அது மீறி பெறும் குறிகைத்திறன் முன்னேற்றம் இல்லையினில் நகர்கருவி வேறு கலத்திற்கு கைமாற்றம் துவக்கும். திறன் சேமிப்பு படிமுறைப்படி (Power Budget Algorithm) இயங்கும் கலத்திலிருந்து குறிகைத்திறன் குறைந்தால் வேறு கலத்திற்கு கைமாற்றம் துவக்கப்படும்.

கம்பியில்லாவில் ஒரு நகர்கருவியின் இருப்பிடம் HLR மற்றும் VLR பதிவகங்கள் மூலம் புதுப்பிக்கப்படுகிறது. ஒரு நகர்கருவி ஒரு பிணையத்திலிருந்து மற்றொன்றிற்கு பயணம் செய்யும்போது அதற்கு பெறும் ஒளிபரப்பில் மாற்றம் தெரியும். அப்பொழுது நகர்கருவி தன் IMSI மற்றும் பழைய தாற்காலிக நகர்சந்தாதாரர் அடையாளம் (Temporary Mobile Subscriber Identity-TMSI) எண்களை புது பிணையத்தின் VLR பதிவகத்திற்கு ஒரு புதுப்பிப்புக் கட்டளையாக (Update Request) அனுப்புகிறது. நகர்கருவிக்கு ஒரு புது MSRN எண் ஒதுக்கப்பட்டு புது பிணையத்தின் VLR மூலம் புது HLR பதிவகத்திற்கு அனுப்பபடுகிறது. புது HLR பழைய பிணையத்தின் VLRக்கு முந்திய MSRN எண்ணை ரத்து செய்யுமாறு தெரிவிக்கிறது; அந்த எண்ணை மறு உபயோகம் செய்ய இயல்கிறது. புது TMSI எண் ஒதுக்கப்படுகிறது. MSC அமைப்பு பொதுத் தொலைபேசி பிணையத்திற்கும் கம்பியில்லாப் பிணையத்திற்கும் இடைமுகமாகும். ஒரு PSTN பிணையத்திலிருந்து தோன்றும் அழைப்பு ஒரு நுழைவாயில் நகர்பேசி சந்தாதாரர் எண் (Mobile Station ISDN-MSISDN) மூலம் MSC நுழைவாயிலுக்கு திசைவு செய்யப்படுகிறது. இந்த நுழைவாயில் நகர்பேசி MSISDN எண்ணுடன் HSRஐ வினாவித்து MSRN எண்ணை பெறுகிறது. இந்த MSRN எண்ணுடன் அழைப்பு MSCக்கு திசைவு செய்யப்படுகிறது. MSCயின் VLR பதிவகம் MSRNஐ எடுத்து மாற்றி நகர்கருவிக்கு TMSI எண் ஒன்றை அளிக்கிறது. ஒரு அழைப்பு BSCயின் கட்டுப்பாடு மூலம் நகர்கருவிக்கு திசைவு செய்யப்படுகிறது.

கம்பியில்லா தொலைதொரபில் ஒரு முக்கியமான இடம் வைத்திருப்பது கம்பியில்லா அணுகு நெறிமுறை அதாவது Wireless Access Protocol. WAP நெறிமுறைமூலம் இணையத்திற்கும் ஒரு நகர்கருவிக்கும் இடையே தொடர்பு இயல்பாகிறது. WAP என்பது ஒரு தூது நெறிமுறை (Messaging Protocol). WAP மூலம் இணையம் மூலம் நகர்கருவிகளுக்கு மின்னஞ்சல், குரல்தகவல், நாட்குறிப்பு ஆகிய சேவைகளை நிறைவேற்ற இயல்கிறது. ஒரு WAP அமைப்பில் 3 பாகங்கள் உண்டு: WAP நுழைவாயில், இணைய வழங்கன் மற்றும் WAP நகர்கருவி. WAP நுழைவாயில் WML தகவல்களை WAP ஏற்கும் நகர்கருவியுடன் பரிமாற்றுகிறது மற்றும் HTML தகவல்களை இணைய வழங்கன் மூலம் பரிமாற்றுகிறது. இணைய வழங்கன் தரவுத்தளங்களுடன் ASP, ColdFusion, CGI அல்லது PHP ஆகிய மென்பொருள் கருவிகள் மூலம் தொடர்புகொண்டு HTML பக்கங்களை வழங்குகிறது.

<<<முந்தியப் பக்கம்

தொடரும்...

புதுப்பிப்பு சனி, 14 ஆகஸ்த் 2004